×

அரசு கல்லூரியில் கருத்தரங்கம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 13: திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்ட சமூகப் பணித்துறை மற்றும் தேசிய சமூக பாதுகாப்புத் துறை புதுடெல்லி இணைந்து போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சக்திவேல் தலைமை வகித்தார். பேராசிரியர் பிரபு வரேவற்றார். பேராசிரியர் சுலோச்சனா சேகர் பேசினார். இதில் 500 கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோப்பு, பேனா, பயிற்சி ஏடு, சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. பிரபு வரவேற்றார். நிகழ்ச்சியின் இயக்குநர் சிகாமணி மற்றும் சுதா, உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினர்.  பெண் குழந்தை விழிப்புணர்வு சமூகப் பாதுகாப்பு பற்றி மாவட்ட குழந்தை நல பாதுகாப்பு மைய அலுவலர் சரிதா மற்றும் உமாதேவி குழந்தை நல பாதுகாப்பு பற்றி பேசினர். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் திலகர் நன்றி கூறினார்.

Tags : Seminar ,Government College ,
× RELATED கிருமி நாசினி, முககவசம் கொடுத்து குடை...