×

திருவண்ணாமலையில் எஸ்பி அதிரடி கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது 30 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவண்ணாமலை, மார்ச் 13: திருவண்ணாமலையில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை எஸ்பி தலைமையிலான போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவண்ணாமலை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் எஸ்பி சிபிசக்கரவர்த்தி தலைமையில், ஏடிஎஸ்பி அசோக்குமார், டிஎஸ்பி அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, திருவண்ணாமலை பாவாஜி நகரில் புதர் மறைவிடத்தில் 4 பேர் கும்பல் கஞ்சா மூட்கைளுடன் இருந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், கஞ்சா மூட்டைகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், கஞ்சா பதுக்கியவர்கள் சமுத்திரம் நகரை சேர்ந்த கவிதா(30), இளையராஜா(28), தமிழ்(24) மற்றும் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த துர்காளி(60) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : SP ,Thiruvannamalai ,
× RELATED பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி...