×

நெடுஞ்சாலைகளை துளைத்து ஆய்வு செய்த அதிகாரிகள்

நாகர்கோவில், மார்ச் 13: பாலமோர் ரோடு, ஆரல்வாய்மொழி-நெடுமங்காடு ரோடு சீரமைப்பு பணிகள் தரமாக உள்ளதா என்று சாலையை துளைத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலமோர் ரோட்டில் நாகர்கோவில் - துவரங்காடு பகுதிகள் வரை ₹1 கோடி 6 லட்சம், ₹50 லட்சம் என்று இரு பகுதிகளாகவும், ஆரல்வாய்மொழி -நெடுமங்காடு ரோடு ₹1 கோடி 17 லட்சம், ₹61 லட்சம் என்று இரு பிரிவுகளாகவும் பணிகள் நடைபெற்றது.

இந்த சாலை பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சாந்தி, கோட்ட பொறியாளர் பாஸ்கர் மற்றும் பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர். ஒப்பந்தக்காரர் கேட்சன் உடன் இருந்தார். இதில் துவரங்காடு, ஈசாந்திமங்கலம், தடிக்காரன்கோணம், கேசவன்புதூர் ஆகிய 4 இடங்களில் அதிகாரிகள் தார் சாலையில் துளை போட்டு உரிய விதிமுறைகளின் கீழ் சாலை பணிகள் நடைபெற்றுள்ளதா? என்று சாலையின் தரத்தை பரிசோதித்தனர்.

Tags :
× RELATED நித்திரவிளை அருகே அதிகாரிகள் அலட்சியத்தால் மின் கம்பத்துக்கு ஊன்று கோல்