×

கலெக்டர் அலுவலகத்தில் நிலவேம்பு கஷாயம் திடீர் விநியோகம்

நாகர்கோவில், மார்ச் 13: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏதும் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுசுகாதாரம் மற்றும் மருத்துவ துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது டெங்கு, சிக்குன் குன்யா போன்ற பாதிப்புகள் இல்லை. இந்தநிலையில் திடீரென்று குமரி மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை சார்பில் சிக்குன் குன்யா, டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்துகொண்டு நிலவேம்பு கஷாயம் அருந்தினர்.


சிற்றார் அணை பகுதியில் மழை
நாகர்கோவில், மார்ச் 13: குமரி மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் மலையோர பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில இடங்களில் நேற்று காலை வரை லேசான சாரல் மழை பெய்தது. சிற்றார்-1ல் 3 மி.மீ, சிற்றார்-2ல் 2, முள்ளங்கினாவிளையில் 3 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 28 அடியாக இருந்தது. அணைக்கு 216 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 36.90 அடியாக இருந்தது. அணைக்கு 14 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 7.67 அடியும், சிற்றார்-2ல் 7.77 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.4 அடியாகும்.

Tags : office ,Collector ,
× RELATED குமரி கலெக்டர் அலுவலக தேர்தல்...