×

பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பிடிஓ திணறல்

ஊத்துக்கோட்டை, மார்ச் 12:  பெரியபாளையத்தில் நடந்த ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில்,ஊராட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பிடிஓ வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சி தலைவர்கள்  ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன் பேசியதாவது:
 ஊராட்சிகளை ஒவ்வொரு தலைவர்களும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வேண்டும். ஊராட்சிகளை தூய்மையாக வைத்திருக்காவிட்டால் தூய்மை பணியாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.இதை கேட்ட ஊராட்சி தலைவர்கள், ஊராட்சியில் நிதி இல்லாத காரணத்தினால்  தூய்மை பணியாளர்கள் மற்றும் பம்ப் ஆப்ரேட்டர்களுக்கு சம்பளம் வழங்கி   மூன்று மாதங்கள் ஆகிறது.

அப்படியிருக்கும்போது, அவர்களை  எப்படி வேலை வாங்க முடியும்.  ஊராட்சிகளில் பணிகள் செய்ய ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதுபோல், ஊராட்சி தலைவர்களுக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஒன்றிய கவுன்சிலர்களை விட நாங்கள் ஊராட்சியை நன்றாக பராமரிப்போம் என்று தலைவர்கள் கூறினர். ஊராட்சி தலைவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பிடிஓ கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பின்னர், ஊராட்சி தலைவர்கள் ஒன்று திரண்டு  ஊராட்சி கூட்டமைப்பு தலைவர்  தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு செய்து தலைவர்களும்  கூட்டத்திலிருந்து வெளியேறினர். இந்த கூட்டத்தில் பெரும்பாலும் பெண் ஊராட்சி தலைவர்களுக்கு பதில் அவர்களின் கணவர்களே பங்கேற்றனர். கூட்டம் பாதியில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Tags : PDO ,panchayat leaders ,office ,Periyapayam Union ,
× RELATED குமரியில் அனுமதியின்றி கூட்டம்...