×

திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு 7 டிராக்டர்கள் சிறைப்பிடிப்பு

திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் அருகே குடியிருப்பு பகுதியில் குப்பை கிடக்கு அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். குப்பை கொட்ட வந்த 7 டிராக்டர்களை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கன்னியம்மன் நகர் பகுதியில் இடத்தை தேர்வு செய்துள்ளனர். இந்த கிராமத்தை சுற்றி வெங்கத்தூர் காலனி, காருண்யா நகர் ஆகிய நகர்களில் 1500 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  மேலும் வெங்கத்தூர் ஊராட்சி க்குட்பட்ட மணவாளநகர், ஒண்டிக்குப்பம்,  பட்டரை ஆகிய பகுதிகளில் வசிக்கும் 15 ஆயிரத்திற்கும்  மேற்பட்  மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை  திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பிரித்து மறு சுழற்சி செய்யும் திட்டம் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள், இத்திட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சாலை மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  இந்த நிலையில் நேற்று தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவதற்காக 7 டிராக்டர்களில் குப்பைகளை கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் 7 டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் மகேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இங்கு குப்பைக் கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும், எனவே குடியிருப்பு அல்லாத பகுதியில் குப்பைக் கிடங்கு அமைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் ஆட்சியரை நேரில் சந்தித்து ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
அப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூறினார். இதனை தொடர்ந்து  கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : tractors ,Tiruvallur Residential 7 ,
× RELATED மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்...