×

மளிகை கடையில் திடீர் சோதனை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட ஜெ.என்.சாலையில் மளிகை கடையில், ஆணையர் நடத்திய திடீர் ஆய்வில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டது. ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பூக்கடைகள், பழக்கடைகள், இனிப்பு, காரம் விற்கும் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் நேற்று நகராட்சி ஆணையர் சந்தானம், சுகாதார அலுவலர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், எழில்முத்து, சுதாகர் மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, ஜெ.என்.சாலையில் ஸ்டேட் பேங்க் எதிரே உள்ள மளிகை கடை ஒன்றில் பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளதா என ஆய்வு செய்தபோது, அங்கு பயன்பாட்டுக்கு வைத்திருந்த, அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதுகுறித்து ஆணையர் சந்தானம் கூறுகையில், ‘’நகராட்சியில் தொடர்ந்து பிளாஸ்டிக் பயன்பாடு உள்ளது. இனி கடைகளில் ஆய்வு நடத்தும்போது, பிளாஸ்டிக் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டால், அதிகபட்ச தொகை அபராதமாக விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும்’’’’ என்றார்.


Tags : grocery store ,
× RELATED மளிகை கடை கோவிலில் திருட்டு