×

மானூர் அருகே மனுநீதி நாள் முகாம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்

மானூர், மார்ச் 12: மானூர் அருகே பன்னீரூத்தில் நடந்த மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷில்பா வழங்கினார்.மானூர் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் பிர்க்காவிற்கு உட்பட்ட மேலஇழந்தைகுளம், சுண்டன்குறிச்சி மஜரா பன்னீருத்து சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை வகித்தார். இதில் 205 மனுக்கள் பெறப்பட்டு 74 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. மற்ற மனுக்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் 50 நபர்களுக்கு வரைமுறை  பட்டா, 20 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நெல்லை சப்-கலெக்டர் மணீஸ் நாரணவேரே, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் ஜீவரேகா மானூர் தாசில்தார் மோகன், துணை தாசில்தார்கள் சங்கரகோமதி நாயகம், மாரியப்பன், புஷ்பராணி, மானூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சீனிவாச சுடலைமுத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Tags : Collector ,Manoor ,camp ,
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி