×

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஆலங்குளம், மார்ச் 12:  ஆலங்குளம் அருகே அடைக்கலப்பட்டினம் வேதம்புதூர் வடக்குத்தெருவை சேர்ந்தவர் மோசஸ் மகன் சீனி செல்வகுமார் (40). மரம் ஏறும் கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், வட்டாலூரில் இருந்து பூலாங்குளம் செல்லும் ரோட்டின் மேல்புறமுள்ள பூலாங்குளம் ஊரைச் சேர்ந்த நயினார் என்பவரது தோட்டத்தில் தென்னை மரத்தில் இளநீர் வெட்டுவதற்கு வந்துள்ளார். மரத்தில் ஏறும்போது தென்னை மட்டையில் மிதித்துள்ளார். அப்போது ஓலை அருகே சென்ற மின்வயரில் பட்டதால் சீனி செல்வகுமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவலறிந்து ஆலங்குளம் எஸ்ஐ சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சீனிசெல்வகுமார் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான சீனி செல்வகுமாருக்கு நிரோஷா (35) என்ற மனைவியும், ரோஷன் (14), லிபியா (13), டேனியல் (5) என 3 குழந்தைகளும் உள்ளனர்.

Tags : Alangulam ,
× RELATED விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே...