×

காட்சிப்பொருளாக இருந்தமின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தம்

கடையம், மார்ச் 12: ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கல்யாணிபுரம் சாலையில், காட்சிப்பொருளாக இருந்த மின்கம்பங்களில் தினகரன் செய்தி எதிரொலியாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. ஆழ்வார்குறிச்சி அடுத்துள்ள கல்யாணிபுரத்தில் இருந்து சிவசைலம் செல்லும் சாலையில் மின்கம்பங்கள் முறையாக பராமரிக்காததால் தெரு விளக்குகள் எரியாமல் இருந்தது. புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல மாதங்களாகியும் இணைப்பு கொடுக்கப்படாமலும் தெருவிளக்குகள் பொருத்தப்படாமலும் இருந்தன. இதனால் இப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் விபத்து அபாயம் காணப்பட்டது. டியூசன் மற்றும் பயிற்சி பள்ளி சென்று வீடு திரும்பும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.  மின் இணைப்பு கொடுத்து தெருவிளக்குகள் பொருத்துவதற்கு பேரூராட்சி சார்பில் மின்வாரியத்திற்கு பணமும் செலுத்தப்பட்டும் மின்வாரியத்தினர் அலட்சியமாக இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து கடந்த 1ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.இந்நிலையில் மின் ஊழியர்கள்  காட்சிப்பொருளாக இருந்த கம்பங்களுக்கு மின் இணைப்பு கொடுத்து தெருவிளக்குகளை பொருத்தினர். மின்விளக்குகள் பொருத்த நடவடிக்கை மேற்கொண்ட மின்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினகரனுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags :
× RELATED 03-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்