×

கடையநல்லூர் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா

கடையநல்லூர், மார்ச் 12:  கடையநல்லூர் இண்டர்நேஷனல் பள்ளி வளாகத்தில் சிந்தட்டிக் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ஹைதர்அலி தலைமை வகித்தார். சேக்மீரான் மைதீன்  முன்னிலை வகித்தார். கடையநல்லூர் இண்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் தலைவருமான முகமது ஹபீப் வரவேற்றார்.   பேட்டை காதர்மைதீன் கொத்துபாவாப்பள்ளி இமாம் செய்யது அஹமது கிராத் ஓதினார். நேஷனல் விளையாட்டு வீரர் அக்பர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று  மாணவ, மாணவிகளுக்கு பயிற்சியளித்தார். விழாவில் முன்னாள் கவுன்சிலர்கள் லியாக்கத் அலி, முகம்மது மைதீன், மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முகம்மதுஉசேன், முகம்மது அக்பர், கடையநல்லூர் இண்டர்நேஷனல் பேட்மின்டன் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags : International Theater Hall ,Kadayanallur School ,
× RELATED பண்டைய மதுரை நகரம் செயல்பட்ட மணலூரில் அகழாய்வு பணிகள் துவக்கம்