×

பெரியதாழையில் கூடுதல் தூண்டில் வளைவு பணி அடுத்த மாதம் துவங்க நடவடிக்கை அமைச்சர் ஜெயக்குமார் உறுதி

சாத்தான்குளம், மார்ச் 12: பெரியதாழையில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்கும் பணி அடுத்த மாதம் துவங்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார்.
 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழையில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன் பிடித்தொழிலையே நம்பியுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு ரூ.25 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அதில் மேற்கு பகுதியில் 800 மீட்டரும்,  கிழக்கு பகுதியில் 200 மீட்டரும் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. இதில்  குறைவான பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து படகு நிறுத்தும் இடத்தில் மணல் அரிப்பு ஏற்படுவதாகவும், படகுகள் சேதமடைவதாகவும் மீனவர்கள் புகார்  தெரிவித்தனர். அத்துடன் கடல் சீற்றம் ஏற்படும் போதெல்லாம் பாதிப்புக்கு உள்ளான மீனவர்கள், கலெக்டர், சண்முகநாதன் எம்.எல்.ஏ. மற்றும்  முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தனர்.

 இதையடுத்து குறைவாக அமைக்கப்பட்ட இடத்தில் ரூ.30 கோடியில் கூடுதலாக தூண்டில் வளைவு அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்ட போதும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன.  இதையடுத்து பெரியதாழை மீனவ  ஊர் கமிட்டி தலைவர்கள் அசோக், லூர்தயா, லிமோன்ஸ், பெரியதாழை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜோசப், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் லாரன்ஸ் உள்ளிட்ட மீனவப் பிரதிநிதிகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சென்னையில் நேற்று சந்தித்து இதுகுறித்த கோரிக்கை மனு  அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் பெரியதாழையில் கூடுதலாக தூண்டில் வளைவு  அமைக்கும் பணி அடுத்தமாதம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : Jayakumar ,Periyar ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...