×

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

ஸ்பிக்நகர், மார்ச் 12:   தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.   தூத்துக்குடி துறைமுகம் லேபர் காலனியை சேர்ந்த சேர்மன் மகன் மாரிமுத்து (37). முத்தையாபுரம் பகுதியில் செயல்படும் லாரிசெட்டில் வேலைபார்த்து வந்த இவர், நேற்று   முன்தினம் மாலை லாரியில் சக்கரம் கழற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக   மின்பாக்ஸ் மீது தவறி விழுந்தார். இதில் மின்பாக்ஸ் உடைந்ததோடு அவர் மீது   மின்சாரம் பாய்ந்ததில் சுருண்டு விழுந்தார். இதையடுத்து அவரை மீட்ட சக தொழிலாளர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மின்சாரம் பாய்ந்ததில் இறந்த மாரிமுத்துக்கு ராஜசுலோக்சா என்ற மனைவியும், வைஷ்ணவி (15) என்ற மகளும், ராஜ்குமார் (11) என்ற மகனும் உள்ளனர். மகள், மகன் முறையே 10   மற்றும் 6ம் வகுப்பு படித்து வருகின்றனர்.   முத்தையாபுரம் சிறப்பு எஸ்ஐ முத்தையா வழக்குப் பதிவுசெய்தார்.   இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரித்து வருகிறார்.


Tags :
× RELATED மின் ஊழியர் பலி