×

சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் தீர்மானம்

சீர்காழி, மார்ச் 12: சீர்காழியில் போக்குவரத்துக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.சீர்காழியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க சீர்காழி வட்ட கிளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது. சீர்காழி வட்ட கிளை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை வகித்தார். பொருளாளர் ராஜகோபால் முன்னிலை வகித்தார். துணை தலைவர் கலியபெருமாள் வரவேற்றார். செயலாளர் பழனி, வரவு செலவு அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் சீர்காழி நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகை மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டம் உருவாக்க பரிசீலனை செய்யப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். உடனடியாக சட்டபூர்வமாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சச்சிதானந்தம், சக்கரவர்த்தி, வைத்தியநாத சுவாமி, சவுந்தர பாண்டியன், பொற்செல்வி, மணிவண்ணன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இணை செயலாளர் ராஜகோபாலன் நன்றி கூறினார்.

Tags :
× RELATED பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நாள் ஒன்றுக்கு 2000 மாஸ்க் தயாரிப்பு