×

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் காரைக்கால் மாவட்ட பொது நூலகத்தை டிஜிட்டல் மையமாக மாற்ற வேண்டும் நூலக வாசகர் சங்கம் கோரிக்கை

காரைக்கால், மார்ச் 12: காரைக்கால் மாவட்ட பொது நூலகத்தை, டிஜிட்டல் மையமாக மாற்ற வேண்டும். என, காரைக்கால் மாவட்ட நூலக வாசகர் சங்கம், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து, காரைக்கால் மாவட்ட நூலக வாசகர் சங்க தலைவர் புத்திசிகாமணி, துணை தலைவர் தங்கவேல், செயலாளர் கமலேஷ் மற்றும் நிர்வாகிகள் ராஜசேகரன், லட்சுமணன் மற்றும் பலர், மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மாவை நேரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: காரைக்கால் மாவட்ட பொது நூலகம் சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இதனை அண்மையில் ஆய்வுசெய்து, ஓரிரு வாரத்தில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். என உறுதியளிக்க அமைச்சர் கமலக்கண்ணன் மற்றும் கலெக்டர் அர்ஜூன் சர்மாவிற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதோடு, நூலக சிரமைப்பு பணியின் தாமதத்துக்கு காரணமாக இருக்கும் நிதி பிரச்சினையை, விரைந்து பெற்று நூலகத்தை விரைவாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் காரைக்கால் மாவட்ட பொது நூலகத்தை மாவட்ட மைய நூலகமாக மாற்றி, அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். புதுச்சேரியில் போல் நூலகத்தை டிஜிட்டல் மையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Swami Darsanam Swami Darshanam Karaikal District Public Library ,
× RELATED ஆண்டுக்கு ரூ.7 லட்சம் கோடி வர்த்தகம்...