×

போலி கால்சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி பென்ஸ் கிளப் உரிமையாளர் உட்பட 4 பேர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி போலி கால்சென்டர் நடத்தி பொதுமக்களிடம் பல லட்சம் பணத்தை மோசடி செய்ததாக பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணன் உட்பட 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் லோன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி வங்கி ஆவணங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்து வருவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு தொடர் புகார்கள் வந்தது. அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதன் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி போலி கால் சென்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அண்ணாசாலையில் உள்ள பென்ஸ் கிளப்பின் ஒருபகுதியில் போலி கால்சென்டர் இயங்கி வருவதாக மத்திய குற்றப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அண்ணாசாலையில் உள்ள பென்ஸ் கிளப்பில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, பென்ஸ் கிளப்பின் ஒரு பகுதியில் இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தி பொதுமக்களை தொடர்பு கொண்டு வங்கியில் லோன் வாங்கி தருவதாக பேசி வங்கி ஆவணங்களை பெற்று லட்சக்கணக்கில் பண மோசடி செய்து வந்தது தெரியவந்தது.
இந்த மோசடி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது. ஒரு நாளைக்கு தலா 3 லட்சம் வீதம் பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலி கால் சென்டர் நடத்திய பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணன், செல்வா (எ) செல்வக்குமார், குமரன், மிதுன் ஆகிய 4 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.  மேலும், போலி கால் சென்டரில் மோசடிக்கு பயன்படுத்திய கணினி, வங்கி ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கடந்த 2018ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவரிடம் 39 லட்சம் ரூபாய் ஏமாற்றிய வழக்கில் பென்ஸ் கிளப் உரிமையாளர் சரவணனை சிந்தாதிரிப்பேட்டை போலீசார் கைது செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : club ,owner ,Benz ,Federal Crime Branch ,
× RELATED முட்டுக்காடு படகு குழாம்,...