×

ஓஎன்ஜிசி சார்பில் அரசு வேளாண் கல்லூரிக்கு பேருந்து வழங்கல்

காரைக்கால், மார்ச் 12: ஓஎன்ஜிசி சார்பில் காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்காக பேருந்து வழங்கப்பட்டது.காரைக்கால் திருநள்ளாற்றை அடுத்த செருமாவிளங்கை பகுதியில் இயங்கி வரும் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்காக, ஓஎன்ஜிசி சார்பில் பேருந்து வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சென்னை ஓஎன்ஜிசி நிர்வாக இயக்குனர் சியாம் மோகன் தலைமை வகித்து, ரிப்பன்வெட்டி, கொடியசைத்து பேருந்தை இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், சென்னை ஓஎன்ஜிசி அதிகாரிகள் மணி, பாஸ்கரன், வெங்கட்ராமன், காரைக்கால் அதிகாரிகள் சாய்பிரசாத், ராஜகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேருந்தை கல்லூரி முதல்வர் கந்தசாமி, இணை பேராசிரியர் காண்டீபன் ஆகியோர் ஓஎன்ஜிசி அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Tags : Government Agricultural College ,ONGC ,
× RELATED காரைக்கால் ஓ.என்.ஜி.சி சார்பில் அரசு...