×

காரைக்கால் அம்மையார் மணி மண்டபத்தில் திருவந்தாதி பொருள் விளக்கம் பாடல் நிறைவு நிகழ்ச்சி

காரைக்கால், மார்ச் 12: காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில், கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த திருவந்தாதி பொருள் விளக்கம் பாடல் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களை, காரைக்கால் கலைஞர்கள் மாமன்றம் பாராட்டியுள்ளது.காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் சப்தஸ்வரம் முதியோர் இல்லமானது, காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில், கடந்த ஒரு மாதமாக காரைக்கால் அம்மையார் அருளிய அற்புத திருவந்தாதி பொருள் விளக்க நிகழ்ச்சியை நடத்தி வந்தது. இந்நிகழ்ச்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அம்மையாரின் திருவந்தாதி பாடல்களுக்கு பொருள் விளக்கம் அளித்த, தமிழ்மாமணி திருமேனி நாகராஜன், பாடல்களை சிறப்பாக பாடிய பொறியாளர் சாய் கிருஷ்ணன் மற்றும் பக்கவாத்திய கலைஞர்கள் கலைமாமணி சரவணன், சத்யராஜ் ஆகியோரை, மாவட்ட கலைஞர் மாமன்றம் பாராட்டியது. இந்நிகழ்ச்சியில் சப்தஸ்வர இசை பேரவை தலைவர் காரை சுப்பையா, செயலாளர் கலைமாமணி சிவசாமி, மாமன்ற தலைவர் கலைமாமணி கவிஞர் தங்கவேல், துணைத் தலைவர் மோகன், பொதுச்செயலாளர் புஷ்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Karaikal Ammayar Mani Mandapam ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...