×

திருமலைராயன்பட்டினம் ஜடாயு புரீஸ்வரர் கோயிலில் தெப்பத்திருவிழா புதுச்சேரி முதல்வர் சுவாமி தரிசனம்

காரைக்கால், மார்ச் 12: காரைக்கால் திருமலைராயன்பட்டினம் ஜடாயு புரீஸ்வரர் கோயிலில் முதன்முறையாக தெப்பத்திருவிழா நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.காரைக்கால் திருமலைராயன் பட்டினத்தில் மையாடுங்கண்ணி சமேத  ஜடாயு புரீஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா கடந்த பிப்ரவரி 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜடாயு ராவண யுத்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் சுதேசி தர்ஷன் என்ற திட்டத்தின் கீழ் இக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் ரூ.2.65 கோடி செலவில் சீரமைக்கவும், குளத்தின் அருகே சமுதாயக்கூடம் கட்டவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.திருக்குளம் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து முதன்முதலாக தெப்பத்் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, நல அமைச்சர் கந்தசுவாமி, எம்எல்ஏ கீதா ஆனந்தன் கலெக்டர்் அர்ஜுன் சர்மா மற்றும் கோயில் நிர்வாகத்தினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Swami Darshanam ,Theppattu Festival Puducherry ,
× RELATED திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்...