×

100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

பெரம்பலூர், மார்ச் 12: 100 நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அகில இந்திய விவ சாயத்தொழிலாளர்கள் சங் கத்தினர் அரசிடம் வலியுறுத்தினர்.அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பக் கிரிசாமிஇ பெரம்பலூர் மாவ ட்டச் செயலாளர் ரமேஷ் உள்ளிட்ட சங்கத்தின் நிர் வாகிகள் பலரும் பெரம்ப லூர் வருவாய் கோட்டாட்சி யர் சுப்பையா என்பவரிடம் அளித்துள்ள புகார் மனுவி ல் தெரிவித்திருப்பதாவது :தேசிய ஊரக வேலை உறு தியளிப்புத் திட்டத்தில் கட ந்த இரண்டு ஆண்டுகளில் வேலை அட்டை பெற்றுள்ள வர்களுக்கு, சரிவர வேலை கள் வழங்கப்படாமலும், நட ப்பாண்டில் மிகக் குறைந்த நாட்களுக்கே வேலைகள் வழங்கப்பட்டும் உள்ளது.

கிராமப்புற மக்களுக்கான வேலைவாய்ப்பு இயந்திர மயமாக்கலால் குறைந்து ள்ளதாலும், தொடர்ச்சியான வறட்சியின் காரணமாக வும்இ அதனையே பெரிதும் நம்பியிருந்த கிராமப்புற பொதுமக்கள் தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடும் நிலை தான் ஏற்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தை முழுமை யாக செயல்படுத்த வேண் டும். பணி செய்தவர்களு க்கு மூன்று மாதங்களாக நிலுவையில் உள்ள கூலி பாக்கியைத் தாமதமின்றி வழங்க வேண்டும். பெரம்ப லூர் மாவட்டத்தில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ35கோடிஅளவுக்கு முறை கேடுசெய்தவர்கள் மீது நட வடிக்கைஎடுக்கப்பட வேண் டும். வேலைஅட்டை பெற்று ள்ள அனைத்துப் பயனாளி களுக்கும் முழுமையாக வே லை வழங்கும் வகையில், அனைத்து ஊராட்சிகளி லும் வேலை தொகுப்பை உருவாக்கிஇ தொடர்ந்து பணி வழங்கப்பட வேண் டும். 2017-2018, 2018-2019ம் ஆண்டுகளில் சமூகத் தணிக்கை யின் போது, கண்டறியப்ப ட்ட முறைகேடுகள், நிதி மோசடிகள் மீது உரிய நடவடிக் கை எடுக்கப்பட வேண்டும்.நூறு நாள் வேலைத்திட்டத் தில் பணி புரிந்த நபர்களு க்கு 15 நாட்களுக்குள் தாம தமின்றி ஊதியம் வழங்க ப்படவேண்டும். வேலை நா ட்களைஆண்டுக்கு 250 தினங்களாகவும், தினக் கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED 100 நாள் வேலைத் திட்டத்தில்...