×

சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்

பெரம்பலூர், மார்ச் 12: பெரம்பலூர் துறைமங்கலத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பொன் ஆனந்தராசு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரஞ்சிதா வரவேற்றார். மாவட்ட செயலாளர் கொளஞ்சிவாசு வேலை அறிக்கையை வாசித்தார்.
கூட்டத்தில் கடந்த 29ம் தேதி ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழு முடிவின்படி நாளை (13ம் தேதி) தமிழக அரசால் பள்ளிகளுக்கு மதிய உண வு வழங்குவதுபோல் காலை உணவையும் அரசு வழங்க வலியுறுத்தி பொதுமக்களுக்கு புரியுமாறு பிரசார விளக்க கூட்டத்தை ஒன்றிய அளவில் நடத்துவது. வருகிற 19ம் தேதி கலெக் டர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு செய்வது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு சட்ட ரீதியான ஓய்வூதியம் வழங்க வேண்டும். எரிவாயு சிலிண்டர்களை அரசே வழங்க வேண் டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணை செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.

Tags : Nutrition Employees Union Executive Committee Meeting ,
× RELATED பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில்...