×

கீழக்காவட்டாங்குறிச்சி ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்

அரியலூர், மார்ச் 12: கீழக்காவட்டாங்குறிச்சி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக மேம்படுத்த நடவடிக்கை வேண்டுமென சிறப்பு கிராமசபை கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தினர்.அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சியில் கருவுற்ற பெண்களுக்கான ஊட்டச்சத்து குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் எளிமையாக கிடைக்கக்கூடிய முருங்கை கீரையை தினசரி உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளை சத்துணவு கொடுத்து பராமரிக்க வேண்டிய நாட்களாக கோல்டன் டேஸ் 1000 நாட்களை அரசு அறிவித்துள்ளது. அந்த நாட்களில் சத்துள்ள எளிமையாக கிடைக்கக்கூடிய கீரைகள், பழங்கள், காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். (தங்கமான நாட்களாக) கருவுற்ற நாள் முதல் 2 வயது வரை 1,000 நாட்கள் குழந்தைகளை பராமரிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தட்டாஞ்சாவடி, சேனாபதி, குந்தபுரம், மேலக்காவட்டாங்குறிச்சி, கீழக்காவட்டாங்குறிச்சி என 5 கிராமங்கள் உள்ளது. இதில் கர்ப்பிணிகள் 24 மணி நேரமும் பிரசவம் பார்ப்பதற்கு சிக்கல் ஏற்படும்போது பெரும்பாலான நேரங்களில் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். எனவே மேல்சிகிச்சைக்காக அலைக்கழிப்பது தவிர்க்கவும், தாய்சேய் உயிரிழப்பு தவிர்க்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தரம் உயர்த்தப்பட்ட உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே அரசுக்கு தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கொண்டுவர வேண்டுமென கிராம மக்கள் சார்பில் ரூ.10 ஆயிரம் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.கூட்டத்தில் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க.சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சுதாகர், வார்டு உறுப்பினர்கள் சிவாலிங்கம், வேம்புவேலுமணி, மணிவேல், ஜெயகலாசாமிநாதன், தனவேல், ஷீலாலெட்சுமணன், பவளக்கொடி பழனிச்சாமி, மூக்காயிரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : health care center ,
× RELATED ரூ.3.04 கோடியில் புதிய நகர்ப்புற ஆரம்ப...