×

கார்பன் தயாரிப்பு தொழிற்சாலையை மூடாவிட்டால் 19ம் தேதி சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம்

தாராபுரம். மார்ச் 12: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த காங்கயம் மற்றும் வட்டமலை பகுதி சார்ந்த 25க்கு மேற்பட்ட விவசாயகளின் பிரதிநிதிகள், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து தலைமையில் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கயம் வட்டம், வட்டமலை கிராமத்தில் கார்பன் தொட்டி கரி உற்பத்தி தொழிற்சாலை கடந்த 5 வருடமாக இயங்கி வருகிறது. வெறும் 15 ஏக்கர் விவசாய பூமியில் அமைந்துள்ள தொழிற்சாலையிலிருந்து மாதம் 1640 டன் கார்பன் தொட்டி கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் இருந்து வெளிவரும் புகை, கருப்புத் துகள்களால் அருகில் உள்ள தென்னந் தோப்புகள், விவசாய நிலங்கள், வீடுகள், கிணறுகளுக்கு பொருத்தப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் சோலார் தகடுகள் உள்ளிட்டவற்றை அனைத்தும் நாசமாகி வருகிறது. மேலும் இந்த தொழிற்சாலையில் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் லிட்டர் நிலத்தடி தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறார்கள், பயன்படுத்திய கழிவு தண்ணீரை பூமிக்கு அடியில் செலுத்துவதால் வட்டமலை கிராமத்தில் விவசாய கிணறுகள், குடிநீர் கிணறுகள்  மற்றும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் மாசடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த தொழிற்சாலைக்கு முறையான அனுமதியும் பெறாமல் அனுமதி பெற்று விட்டோம் என பொய்யாக கூறிக்கொண்டு அதுவும் மிகப்பெரிய  இத்தொழிற்சாலையை விவசாய பூமிகள் நிறைந்த இடத்தில் வெறும் 15 ஏக்கர் நிலத்தில் எப்படி அமைக்க முடியும். எனவே தொழிற்சாலையை மூட வலியுறுத்தியும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தர வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டரிடம் பலமுறை பல மாதங்களாக புகார் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இந்த தொழிற்சாலையை மூடும் வரை விவசாயிகளும் பொது மக்களும் கால்நடைகளும் உயிர்வாழ முடியாது எனவே வரும் 16ம் தேதிக்குள் இந்த பிரச்னையில் தீர்வு காணவிட்டால் 19ம் தேதி தாராபுரம் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குடும்பத்துடனும் கால்நடைகளுடனும் கிராமபொதுமக்கள் விவசாய தொழிலாளர்கள் அனைவரும் காத்திருப்பு போராட்டம் செய்யப்படும் இவ்வாறு  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், காங்கயம் அருகே செயல்பட்டு வரும் தொட்டி கரி ஆலையை அக்கற்ற கோரி தாராபுரம் சப் கலெக்டரிடம் தற்போது 6 வது முறையாக புகார் மனு கொடுக்க வந்துள்ளோம் ஆனால் இதுவரை எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வில்லை என்றார்.

Tags :
× RELATED காங்கயம் அருகே சாலையோரம் புதரில் திடீர் தீ