×

எள் காய வைக்கும் பணி தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு காது வில்லை அணிவிக்கும் பணி துவக்கம்

அரியலூர், மார்ச் 12: மத்திய அரசின் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும் UID மற்றும் Bar code உடன் கூடிய காதுவில்லை அணிவிக்கப்படவுள்ளது. இத்திட்டத்துக்கு கால்நடை வளர்ப்போர் ஒத்துழைக்க வழங்க கேட்டு கொள்ளப்பட்டது.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் முதலாவது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி பணி கடந்த 28ம் தேதி முதல் மாடுகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தடுப்பூசி பணி செய்யும் முன் அனைத்து கால்நடைகளுக்கும் காதுவில்லை அணிவிப்பது இந்திய அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு அணிவிக்கப்படும் காதுவில்லை UID எண் விவரங்கள், தேசிய பால்வள மேம்பாட்டு வாரிய கால்நடை பெருக்கம் மற்றும் நலப்பணிகள் குறித்த தகவல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது.எனவே கால்நடை பராமரிப்புத்துறை பணியாளர்கள் கிராமத்துக்கு வந்து தடுப்பூசி பணி செய்யும்போது காது அடையாள வில்லை பொருத்தப்படுவதற்கும் விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இனி வருங்காலங்களில் அரசின் மூலம் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள், கால்நடை காப்பீடு போன்ற அனைத்துக்கும் காது வில்லை அடையாள எண் அவசியம் என்பதால் கால்நடை வளர்ப்போர் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண், கைபேசி எண் தவறாமல் முகாமுக்கு எடுத்து வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த திட்டத்தின்கீழ் அரியலூர் மாவட்டத்தில் உள்ள 1,65,800 கால்நடைகளுக்கு அடையாள எண் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.
மக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

Tags : Commencement ,
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...