×

புறம்போக்கு இடத்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு வி.ெஹச்.பி. வட்டாட்சியரிடம் புகார்

காங்கயம், மார்ச் 12: வெள்ளகோவில் அருகே அனுமதியின்றி புறம்போக்கு இடத்தில் கட்டப்படும் தேவாலயத்தை தடுத்து நிறுத்தக்கோரி, வி.ெஹச்.பி. சார்பில் காங்கயம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.  இது குறித்து வி.ெஹச்.பி. மாவட்ட தலைவர் ராஜகோபால் தலைமையில் பொதுமக்கள், காங்கயம் வட்டாட்சியர் புனிதவதியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு கிராமம், சேனாபதிபாளையத்தில் பெரும்பான்மையான இந்துக்கள் வசித்து வருகின்றனர். அவர்களை ஒட்டு மொத்தமாக கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காக திட்டமிட்டு கிறிஸ்தவ அமைப்புகள் ஊர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து பிரமாண்டமான தேவாலயம் அமைத்து வருகிறது. இந்த புறம்போக்கு நிலத்தின் அருகில் உள்ள வீடுகளின் முன்பு கட்டுமானப் பொருட்கள் கொட்டி இடையூறு ஏற்படுத்தியும், வீட்டின் முன்பு எச்சில் இலைகளை தூக்கி எறிந்தும் பள்ளி குழந்தைகளின் வேன்களுக்கு வழி விடாமல் தடுப்பு ஏற்படுத்தி அவர்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர். தேவாலயம் கட்டினால் அங்குள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கியினாலும் பாதிப்பு ஏற்படும்.  எனவே தேவாலயம் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும், தேவாலயத்தை அமைப்பதை தடுத்து நிறுத்தவும், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : protests ,VHP ,
× RELATED சங்கரன்கோவிலில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்