×

ரூ.14.50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

திருப்பூர், மார்ச் 12:திருப்பூரில், 29 பயனாளிகளுக்கு ரூ.14.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.  திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், 6 பயனாளிக்கு தலா ரூ.58,690 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 1 பயனாளிக்கு ரூ.12,000 மதிப்பில் நவீன செயற்கை கால் வழங்கப்பட்டது. மேலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பல்லடம் வட்டத்தை சார்ந்த 20 பயனாளிகளுக்கு தலா ரூ.12,000 மதிப்பில் ரூ.2,40,000 மதிப்பிலான முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.85,000 மதிப்பில் உதவித்தொகை என 29 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 140 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். இதில் சமூக பாதுகாப்பு தணித்துணை கலெக்டர் விமல்ராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், துணை கலெக்டர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED 3000 பேருக்கு நலத்திட்ட உதவி