×

தாராபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தாராபுரம், மார்ச் 12:எஸ்டிபிஐ கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் இக்பால் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து தாராபுரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில் தலைமை வகித்தார். 100 பெண்கள் உட்பட 200 பேர் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் இக்பாலை தாக்கிய கும்பலை கைது செய்யக்கோரி கோஷமிட்டனர்.இதில் நகர தலைவர் முகமது இசாக், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் ஜியாவுதீன், மாவட்ட பொருளாளர் சித்திக், மாவட்ட பேச்சாளர் ஷேக் அலாவுதீன் தொகுதி செயற்குழு உறுப்பினர் அப்துல் ரகுமான் ஆகியோர் பேசினர்.

Tags : SDPI ,protest ,Dharapuram ,
× RELATED மின்கம்பி உரசி லாரியில் தீப்பிடித்தது