×

கலெக்டர் தகவல் இருந்திராப்பட்டி, கந்தர்வகோட்டையில் சிறப்பு கிராமசபை கூட்டம்

இலுப்பூர், மார்ச் 12: இலுப்பூர் அருகே இருந்திரப்பட்டியில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் திட்டம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.இலுப்பூர் அருகே உள்ள இருந்திரப்பட்டி ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முத்து மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். இதில் 0-6 வயது வரையுள்ள குழந்தைகள், இளம்பருவ பெண்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்கள் ஆகியோர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது, மகளி உரிமை உணர வைத்தல், பெண்களுக்கு சம உரிமை வழங்குதல், கிஸான் கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் வழங்கும் திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதல் துணை தலைவர் மாணிக்கம் உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற சிறப்பு கிராமசபை கூட்டம் ஆபத்சகாஈஸ்வரர் ஆலயத்தில் தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் மற்றும் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் நல்லமுத்து கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு அறிவித்துள்ள விவசாயிகள் கடன் அட்டை பெற அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுகாதார ஆய்வாளர் நல்லமுத்து கொரனோ வைரஸ் எவ்வாறு தாக்குகிறது? அவற்றை தடுக்க என்னென்ன வழிகளை மேற்க்கொள்ள வேண்டும் என விரிவாக எடுத்துரைத்தார். கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கடேஷ், உறுப்பினர்கள் ரவி, செந்தில்குமார், இந்திராகாந்தி, மணிமேகலை, ஊராட்சி செயலர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : meeting ,Special Grama Sabha ,Kandarwagotte ,
× RELATED சுயமரியாதை இயக்க விழா பொதுக்கூட்டம்