×

மனித சங்கிலியில் ஏராளமானோர் பங்கேற்பு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கை கழுவுதல் பயிற்சி

கந்தர்வகோட்டை, மார்.12: கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுச் சூழல் மன்றம் சார்பில் கொரனோ வைரஸ் விழிப்புணர்வு மற்றும் கை கழுவுதல் பயிற்சி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி நிர்வாகிகள் மாணவ, மாணவிகளுக்கு சோப்பு மற்றும் கைகழுவும் திரவம் வழங்கினார்கள். ஓய்வு பெற்ற அரசு மருத்துவர் சாமிநாதன் மாணவர்களுக்கு கொரனோ வைரஸ் என்றால் என்ன என்றும், வைரஸ் எவ்வாறு மனித இனத்திற்கு தீங்கு விளைவிக்கிறது என்றும் அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது குறித்தும் தன் சுத்தம் குறித்தும் விளக்கி கூறினார். மாணவி ரியா கைகழுவதில் உள்ள ஏழு முறைகளை பற்றி செய்முறை விளக்கம் செய்து காட்டினார். பள்ளி ஆசிரியர்கள் ரகமதுல்லா, பாக்கியராஜ், நீவின், ஜாய்செல்வின்ராய் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். கணித பட்டதாரி ஆசிரியை மணிமேகலை நன்றி கூறினார்.

Tags : participants ,
× RELATED வயது முதிர்ந்தவர்கள்,...