×

நாடு முழுவதும் வருமான வரி நிலுவை வழக்கு 4.83 லட்சம் திருச்சி சரக வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பேச்சு

தஞ்சை, மார்ச் 12: தஞ்சையில் வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு, கும்பகோணம் பட்டய கணக்காளர் சங்கம் இணைந்து பாராளுமன்றத்தில் பட்ஜெட்டில் புதிதாக தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி வழக்கு நிலுவை தீர்வு திட்டம் குறித்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அறிமுக கூட்டம் நடந்தது. கும்பகோணம் தணிக்கையாளர் சங்க தலைவர் விசாகன் வரவேற்றார். திருச்சி சரக வருமானவரித்துறை முதன்மை ஆணையர் நரேந்திர கவுல் பேசியதாவது:மத்திய அரசின் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு வியாபாரிகளும் பொதுமக்களும் அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை உடன் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் 4.83 லட்சம் வருமான வரி நிலுவை வழக்குகள் உள்ளன. நிலுவையில் உள்ள வழக்குகளை முடித்து கொள்ள சலுகைகள் வழங்கப்படுகிறது. வரும் 31ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வியாபாரிகள், பொதுமக்களுக்கு அசல் வரி கட்டினால் போதும். வட்டி மற்றும் அபராத தொகையிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல் வரும் 30.6.2020க்குள் வருமான வரி செலுத்துவோருக்கு வெறும் 10 சதவீதம் மட்டும் கூடுதலாக செலுத்தும் சலுகை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை வழக்கு நிலுவையில் வைத்துள்ள வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். கவுரவ விருந்தினராக திருச்சி இணை ஆணையர் சுரேந்திரநாத், தஞ்சை இணை ஆணையர் சிவகுமார் பங்கேற்றனர்.

தேசிய ஒருங்கிணைப்பாளரும், வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளருமான ஆடிட்டர் ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விழாவில் வருமான வரித்துறை மக்கள் தொடர்பு அதிகாரி பீர்முகமது, திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் இருந்து வருமான வரி அலுவலர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வருமான வரி பணியாளர்கள், பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் வியாபாரிகள், சேம்பர் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்டிரிஸ் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...