×

கோவிலாச்சேரியில் நாளை மக்கள் குறைதீர் முகாம்

கும்பகோணம், மார்ச் 12: கும்பகோணம் தாலுகா கோவிலாச்சேரி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.இதுகுறித்து தாசில்தார் பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் தாலுகா கோவிலாச்சேரி கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாமில் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். எனவே ஒரே நாளில் முடிவு செய்யக்கூடிய ஜாதி சான்று, வருமானம், இருப்பிடம், பிறப்பு இறப்பு, முதல் பட்டதாரி போன்ற சான்றுகளுக்கான உரிய படிவத்தில் ஆதார ஆவணங்களை இணைத்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனு கொடுத்து பொதுமக்கள் பயனடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Camp for Tomorrow ,Kovillachery ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...