தஞ்சையில் 21ம் தேதி புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட விழிப்புணர்வு கூட்டம்

தஞ்சை, மார்ச் 12: வரும் 21ம் தேதி நடைபெற உள்ள புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அழைப்பு விடுத்துள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் கருணைத்தொகை பெறுபவர் ஆகியோருக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018 குறித்த விழிப்புணர்வு கூட்டம் தஞ்சை அருளானந்த நகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிலோமினா அரங்கில் வரும் 21ம் தேதி நடக்கிறது.எனவே தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கருணை தொகை பெறுபவர்கள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரி அழைப்பு விடுத்துள்ளார்.

Related Stories:

>