×

காட்டு தீயை தடுக்க தீயணைப்பு துறை தயார்

குன்னூர், மார்ச் 12: குன்னூர் பகுதியில் காட்டு தீ ஏற்பட்டால் அணைக்க தீயணைப்பு துறை 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது.  குன்னூர் பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் தற்போது ஏற்பட்டு வரும் கோடை வறட்சி காரணமாக பல்வேறு இடங்களில் காட்டு தீ ஏற்படுகிறது. இதன் காரணமாக அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை தீயில் கருகி வீணாகிறது. இதை தடுக்கும் விதமாக தீயணைப்பு துறையினர் தண்ணீரை சேகரித்து வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி குன்னூர் பகுதியில் உள்ள தன்னார்வலர்கள் 25 பேரும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து செயல்பட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். தற்போது தீயணைப்பு துறையினர் 35 பேர் இருக்க வேண்டிய இடத்தில், 21 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் இரு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அப்பகுதிகளுக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே காலியாக உள்ள இடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : fire department ,
× RELATED கொரோனா, அம்பன், வெட்டுக்கிளிகள்,...