×

திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் கோயில் குளத்தில் வெங்காயதாமரை அகற்றும் பணி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 12: திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பிள்ளையார்கோயில் குளத்தில் மண்டியுள்ள வெங்காயத்தாமரை செடிகளை தினகரன் செய்தி எதிரொலியால் ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கையின் பேரில் அகற்றும் பணி நேற்று துவங்கியது.திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புபுறம் பிள்ளையார் கோயில் குளம் உள்ளது. இந்த குளம் திருத்துறைப்பூண்டி பெரிய கோயில் கட்டுப்பாட்டில் உள்ளது. குளம் அருகில் நெடும்பலம் கடைத்தெரு உள்ளது. மேலும் பழனி ஆண்டவர் கோயில் உள்ளது. இந்த குளத்தை நெடும்பலம் கிராம மக்கள் மட்டுமல்லாமல், திருத்துறைப்பூண்டி - பட்டுக்கோட்டை சாலை என்பதால் இந்த சாலை வழியோ செல்லும் 100க்கும் மேற்பட்டவர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது குளம் முழுவதும் வெங்காயதாமரை செடிகள் மண்டி கிடப்பதால் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கோயில் நிர்வாகம் குளத்தை சுத்தம் செய்யவில்லை என்றால் ஊராட்சி நிர்வாகம் நூறுநாள் வேலை திட்டத்தில் குளத்தை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த செய்தி படத்துடன் கடந்த 4ம் தேதி தினகரனில் வெளியானது.இதன் எதிரொலியாக நெடும்பலம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோயில் வெங்காயதாமரை செடிகளை அகற்ற ஊராட்சி மன்ற தலைவர் பழனி நடவடிக்கை எடுத்தார். இந்த பணியை ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் நெடும்பலம் கிராம மக்கள் வெங்காய தாமரை செடிகளை அகற்று பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் ஈடுபட்ட 110 பேருக்கு நேற்று மதிய உணவினை நெடும்பலம் வர்த்தக சங்கம் வழங்கியது. இந்த பணி இன்னும் 5 நாட்கள் நடைபெறும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பழனி தெரிவித்தார்.

Tags : Removal ,Venkayadamar ,Nedumbalam Temple ,pond ,Tirupathirapundi ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...