×

அம்பலமூலா அரசு பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

பந்தலூர், மார்ச் 12:   பந்தலூர் அருகே அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.  பந்தலூர் அருகே அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார். நெலாக்கோட்டை ஊராட்சி உறுப்பினர் சுந்தரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினார். இதில் 156 மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பினோய், குணவதி, ரம்யா, சகாதேவன், சங்கர், ஜார்ஜ் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : cycling ceremony ,Ambalamoola Government School ,
× RELATED ராஜபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா