×

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 12: சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பசேினார்.ருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி செயல் திட்ட விளக்க கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ரகுராமன் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ் முன்னிலை வகித்தார். முழு நேர ஊழியர்கள் செயல்பாடு குறித்து மாநில குழு உறுப்பினர் நாகராஜன் பேசினார். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேசினார். மத்திய, மாநில முடிவுகள் குறித்தும், இன்றைய அரசியலில் நடைபெறுகிற பல்வேறு பிரச்னைகள் குறித்தும் நாளை (13ம் தேதி) கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நடைபெறுகின்ற இந்த இயக்கங்களில் ஒன்றிய தலைநகரங்களில் அதிகமாக அணிதிரட்டுவது, வருகிற 23ம்தேதி பகத்சிங் நினைவு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை துண்டு பிரசுரங்களாக, இயக்கங்களாக மக்களிடம் கொண்டு செல்வது, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி மக்கள் உயிரிழப்பு அதிகமாகிறது. இதனால் மாவட்ட தலைநகரங்களில் அதற்கான மருத்துவ முகாம்களை அமைப்பது, குடியுரிமை திருத்த சட்டம் என்பது இஸ்லாமியருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலுள்ள அனைவருக்கும் எதிரானது. அதனால் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அதிமுக அரசு உடனடியாக நிறைவேற்ற கூடாது என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றவேண்டும் என்று கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் விளக்கவுரை ஆற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குமாரராஜா, தமிழ்மணி, ஜோதிபாசு, முருகானந்தம், மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சாமிநாதன், பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன், கதிரேசன், சண்முகசுந்தரம், திருஞானம், நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் க லந்து கொண்டனர்.

Tags : Legislature ,
× RELATED டெல்லி சட்டப்பேரவை: பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்