×

காரைக்காலில் இருந்து திருச்சிக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட 600 பாக்கெட் சாராயம்

திருச்சி, மார்ச் 12: திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில், மீண்டும் அங்கிருந்து இரவு திருச்சி வரும். பின் மீண்டும் காலை புறப்பட்டு செல்லும். இதில் நேற்று முன்தினம் இரவு காரைக்காலில் இருந்து இந்த ரயில் திருச்சி வந்தது. தொடர்ந்து நேற்று காலை காரைக்காலுக்கு புறப்படுவதற்கு முன் யார்டில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஒரு ரயில் பெட்டியில் கழிவறையில் சுமார் 6 கட்டை பைகளில் 600க்கும் மேற்பட்ட பாக்கெட் சாராயம் இருந்தது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து 6 பைகளில் இருந்த பாக்கெட் சாராயத்தை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், காரைக்காலில் பாக்கெட் சாராயம் சரளமாக விற்கப்பட்டு வருகிறது. இதனை அங்கிருந்து வாங்கி வந்து திருச்சி மற்றும் சுற்று பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ரயில் நிலையத்தில் சோதனை அதிகளவில் இருந்ததால் சாராயம் கடத்தி வந்த மர்ம ஆசாமிகள் கழிவறையில் வைத்து தப்பி உள்ளனர். மறுநாள் சோதனையில் இது தெரியவந்தது என்றனர்.தொடர்ந்து கைப்பற்ற பாக்கெட் சாராயத்தினை மாநகர மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருச்சியில் பாலக்கரை, தில்லைநகர், ரங்கம், எ.புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை வெகு ஜோராக நடந்து வரும் நிலையில் தற்போது மாநகரில் புதுச்சேரி பாக்கெட் சாராயமும் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் பறிமுதல்டாஸ்மாக்கில் சரக்கு விலை அதிகரித்ததால்...
தமிழக அரசு ஜனவரி மாதம் முதல் டாஸ்மாக் மதுவை குவார்ட்டருக்கு ரூ.5 அதிகமாக்கியுள்ளது. இதனால் குடிமகன்கள் திண்டாடி வருகின்றனர். மது மற்றும் சைடிஸ் உள்பட குவார்ட்டருக்கு சுமார் 200 முதல் 250 ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. இதனை அடுத்து ரூ.50 பெறுமான முள்ள பாக்கெட் சாராயம் தங்களுடைய பட்ஜெட்டிற்கு ஏற்றதாக இருப்பதாக நினைத்து குடிமகன்கள் இதற்கு மாறி உள்ளதாக தெரியவந்துள்ளது.

Tags : Karaikal ,Trichy ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...