×

கல்லணையிலிருந்து பிரிந்து செல்லும் காவிரியாற்றில் மணல் திட்டுக்களை அகற்றி சமப்படுத்தும் பணி தீவிரம்

திருவெறும்பூர், மார்ச் 12: கல்லணையில் இருந்து பிரிந்து செல்லும் காவிரி ஆற்றை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத் துறையின் சார்பில் ரூ.63 லட்சம் செலவில் தள மட்டங்களில் உள்ள மணல் திட்டுகளை அகற்றி சமப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கல்லணையிலிருந்துதான் காவிரி ஆறு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் என நான்காக பிரிந்து செல்கிறது. இந்த ஆறுகள் மூலம் பாசன வசதி பெறும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன் அடைந்து வருகிறது. ஆனால் கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அந்த ஆறுகளில் செல்லும்போது ஆறுகளின் குறுக்கே உள்ள மணல் திட்டுக்களால் தண்ணீரை கல்லணையில் இருந்து இழுத்து வாங்க முடியாமல் தேக்க நிலை ஏற்படுகிறது. இதனால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் பிரச்னை உருவாகியுள்ளது.இந்நிலையில் அதனை சரி செய்யும் பொருட்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பில் நீர்வள ஆதாரத்துறை திட்டத்தின் கீழ் கல்லணை காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் காவிரி ஆற்றில் தொடக்கத்தில் 830 மீ. தூரத்திற்கு தரை தள மணல் திட்டுகளை அகற்றி சமன்படுத்துவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் 2019 மற்றும் 2020ம் நிதியாண்டில் டெண்டர் விடப்பட்டது.

அதன்படி, தற்போது கல்லறையில் இருந்து பிரிந்து செல்லும் காவிரி ஆற்றில் 830 மீ. தூரத்திற்கு தரைதளம் மணல் திட்டுகளை அப்புறப்படுத்தி சமன்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 3 பொக்லைன் மற்றும் ஒரு சமன்படுத்தும் இயந்திரமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இனிவரும் காலங்களில் கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும்போது தண்ணீர் தேக்கம் இல்லாமல் போவதுடன் கடைமடை பகுதிகளுக்கு விரைவிலும் எளிதாகவும் தண்ணீர் சென்று சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : sand dunes ,
× RELATED 80 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பென்னா...