×

குடும்ப தகராறு புகாரை விசாரிக்க அழைத்ததில் இன்ஸ்பெக்டர் கண் முன்னே மனைவியை தாக்கியவர் கைது காரை மறித்த அக்கா மகனும் சிறையிலடைப்பு

திருச்சி, மார்ச் 12: ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுஷா (30). இவர் கடந்த 2012ல் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்தபோது திருச்சி எ.புதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்து (39) என்பவரை காதலித்தார். இருவரும் கடந்த 2013ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தமலையில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

இதில் தம்பதிகளுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதில் மாரிமுத்து இன்டீரியர் டெக்கரேட்டராக வேலை செய்து வருகிறார். இதில் திருமணத்திற்கு பின் மாரிமுத்து அவரது அக்காவுடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார். சந்தோஷமாக சென்ற குடும்பத்தில் திடீரென கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தகராறில் குழந்தையை பறித்து வைத்து கொண்ட மாரிமுத்து, அனுஷாவை வீட்டை விட்டு துரத்தியதாக கூறப்படுகிறது. இதில் தனது குழந்தையை தன்னிடமிருந்து பிரித்தது குறித்து விசாரணை நடத்தி குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் அனுஷா புகார் அளித்தார். புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என நேற்று முன்தினம் மாரிமுத்துவிற்கு இன்ஸ்பெக்டர் ஆனந்த வேதவள்ளி உத்தரவிட்டு வரவழைத்தார்.

இதில், அக்கா மகன் அரவிந்தராஜ் (27) உடன் விசாரணைக்காக மாரிமுத்து வந்தார். அப்போது மீண்டும் காவல் நிலையத்தில் கணவன், மனைவியிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த மாரிமுத்து, இன்ஸ்பெக்டர் கண் எதிரில் மனைவி அனுஷாவை தாக்கினார். இச்சம்பவத்தினால் இன்ஸ்பெக்டர் உள்பட பெண் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அரவிந்தராஜ், அவர்கள் வந்த காரை எடுத்து காவல் நிலையத்தில் உள்ள குறுக்கே நிறுத்தி தகராறில் ஈடுபட்டார். இதனால் மகளிர் காவல் நிலையில் பரபரப்பானது. இது குறித்து வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர், மாரிமுத்து, அரவிந்த்ராஜ் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தார்.

Tags : inspector ,family dispute ,
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு