×

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

திருச்சி, மார்ச் 12: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு பயணிகள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் விமான நிலைய வளாகத்தில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல ரயில் நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது. ரயில் நிலைய அனைத்து நடை மேடைகள், ரயில் பெட்டிகளில் கொசு மருந்து, கிருமிகள் ஒழிப்பு மருந்து தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மாஸ்க் அணிந்து பணியாற்றி வருகின்றனர். ரயில் இன்ஜின் டிரைவர்களும் மாஸ்க் அணிந்து ரயிலை இயக்கினர்.

பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலைய மேலாளர் விருத்தாசலம் நேற்று காலை ரயில் நிலையத்தில் நின்றிருந்த திருச்சி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு மாஸ்க் வழங்கினார். மேலும் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என்பது உள்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் கல்யாணசுந்தரம், முதன்மை டிக்கெட் பரிசோதகர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலகர்கள் கலந்துகொண்டனர்.களமிறங்கினர் அதிகாரிகள்

Tags : railway station ,Trichy Junction ,
× RELATED சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழப்பு