×

கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லட்சம் விவசாயிகளை ஒன்று திரட்டி மறியல் தொட்டியத்தில் பேரணி நடத்திய விவசாயிகள் அரசு எச்சரிக்கை

தொட்டியம், மார்ச் 12: தொட்டியத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் சார்பில் நேற்று பேரணி நடந்தது.
தொட்டியத்தில் அனைத்து விவசாயிகள் சங்கங்கள் மற்றும் வணிகர் சங்கம் இணைந்து நடத்திய பேரணியில் காவிரியாற்றில் ஆற்றில் தடுப்பணை வேண்டும். கோதாவரி நதியை காவிரியுடன் இணைக்க வேண்டும். காவிரியாற்றின் பாசன வாய்க்கால் தலைப்பை மாயனூர் கதவணையில் அமைக்க வேண்டும். பாசனத்திற்கு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த பேரணியில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.தொட்டியம் பண்ணை வீடு என்ற இடத்தில் துவங்கிய இந்த பேரணிக்கு விவசாய சங்க நிர்வாகி மருதப்பிள்ளை தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் குமார் பேரணியை துவக்கி வைத்தார். விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் அய்யாக்கண்ணு, காந்திபித்தன், தியாகராஜன், மணிக்குட்டி, ராஜாராம், கிருஷ்ணமூர்த்தி, தோளூர்பட்டி ஊராட்சித் தலைவர் சரவணன் உள்ளிட்ட பலர் விவசாயிகளின் போராட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாகப் பேசினர். பின்னர் தொட்டியம் தாசில்தார் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்று செயல்படுத்த வேண்டும். காவிரி ஆற்றில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கோரிக்கைகளை தவிர்த்தால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். பேரணியில் விவசாயிகள் ஏர் கலப்பை, வாழை மரங்கள், வெற்றிலைக் கொடிகள் ஆகியவற்றை எடுத்து வந்தனர். முசிறி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : government ,highway ,Pickettiya Thottiyam ,
× RELATED கம்பம் புறவழிச் சாலைகளில் பழுதான...