×

ஊரக வேலை திட்டத்தில் பள்ளிகளில் 1000 கழிவறைகள் கட்டும் பணி

கோவை, மார்ச் 12:  மத்திய அரசு,  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பள்ளி கழிவறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய முன் வந்தது. 75 சதவீத தொகை மற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மூலமாக கழிவறை கட்ட ஒப்புதல் வழங்கியது. இதற்காக நடப்பாண்டிற்கு மத்திய அரசு தமிழகத்திற்கு 47.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாணவர்களுக்கு 400 கழிவறைகள், மாணவிகளுக்கு 600 கழிவறைகள் என 1000 கழிவறைகள் கட்டப்படும். மாணவர்களுக்கு ஒரு  கழிவறை கட்ட 4.19 லட்ச ரூபாய், மாணவிகளுக்கான ஒரு கழிவறைக்கு 5.14 லட்ச ரூபாய் என நிதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்களின் கூலிக்காக 4.66 கோடி ரூபாயும், கட்டுமான பொருட்களுக்காக 42.94 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. மத்திய அரசு 32.21 கோடி ரூபாயும், மாநில அரசு தனது பங்களிப்பாக 10.73 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி துறையினர் கூறுகையில், ‘‘ 100 நாள் வேலை திட்டத்தில் கழிவறை கட்ட ஒப்புதல் வழங்கியதால் பணிகள் வேகமாக முடியும் நிலையிருக்கிறது. அரசு ஆரம்ப பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் தேவையான கழிவறைகள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டு வருகிறது, ’’ என்றனர்.

Tags : bathrooms ,schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...