×

கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

ஈரோடு, மார்ச் 12:  ஈரோடு கள்ளுக்கடைமேடு கோயிலில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் விழா மாசிமாதம் நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி, இந்தாண்டு குண்டம் விழா கடந்த மாதம் 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து சிறப்பு வழிபாடுகள், பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வருதல் உள்ளிட்டவை நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. இதில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொங்கல் வைத்தல், அம்மன் ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது. இன்று (12ம் தேதி) மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags : Gundam Festival ,Padukkalayamman Temple ,
× RELATED பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா...