×

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 12:  ஈரோட்டில் போஸ்ட்மேன்களுக்கான நேரடி நியமன தேர்வினை உடனடியாக நடத்த வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜெசிஏ) சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சுவாமிநாதன், மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், மூன்றாண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள நேரடி போஸ்ட்மேன் தேர்வினை உடனடியாக நடத்த வேண்டும். போஸ்ட்மென், எம்டிஎஸ் காலியிடங்கள், எல்ஆர் பதவிகளை உடனடியாக நிரப்ப வேண்டும். போஸ்ட்மேன்களை பட்டுவாடாவிற்கு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நடைமுறை சாத்தியமற்ற இலக்குகள் நிர்ணயித்து எஸ்பி, ஆர்டி உள்ளிட்ட கணக்குகள், காப்பீடு பாலிசிகளை பிடிக்க நெருக்கடி கொடுப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில், ஈரோடு, பவானி, கோபி பகுதியை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தூய்மை பணியாளர்கள் போராட்டம்