×

முதலில் இங்கிருந்து துவங்கலாமே!அமைச்சரவையில் பெண்களுக்கு இடமளியுங்கள்

புதுச்சேரி, மார்ச் 12:     அமைச்சரவையில் முதலில் பெண்களுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வர் நாராயணசாமியின் பேச்சுக்கு கிரண்பேடி பதிலளித்துள்ளார்.    புதுவையில்  மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர்  தினவிழா நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் நாராயணசாமி, சட்டமன்றம்,  நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர பிரதமர் மோடியை  வலியுறுத்துவேன் என்று பேசினார். மேலும் அமைச்சர் கந்தசாமி, என் துறை  சார்ந்த பிரச்னைகளை மூன்று மாதத்துக்குள் தீர்க்காவிட்டால் அமைச்சர் பதவியை  ராஜினாமா செய்வேன் என கவர்னருக்கு கெடு விதித்தார்.  இதற்கு கவர்னர் கிரண்பேடி பதில் அளித்துள்ளார். அவரது வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் நடந்த மகளிர் தினவிழாவில், கலந்து  கொண்ட பிரபல பேச்சாளர்( அமைச்சர் கந்தசாமி)  தங்கள் சொந்த எண்ணங்களை பேசுவதற்காக கொண்டு வந்தனர். தங்களின் விரக்தியை வெளிப்படுத்தவும், குறைபாடுகள்,  மோதல்களை பட்டியலிடவும் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டனர்.

 அதேபோல்  பெண்களின் பலத்தையும், தனித்துவமான பங்களிப்பையும் வெளிப்படுத்தும் ஒரு  வாய்ப்பாக விழா அமைந்தது. ஏராளமான வாய்ப்புகள் புதுச்சேரில் இருக்கிறது, இவற்றை  எப்படி பயன்படுத்திக்கொள்வது என சிலவற்றை நினைவூட்டினேன்.  தொழில் துவங்குவதற்காக அரசாங்க நிதியுதவி, வங்கி திட்டங்கள் ஏராளமாக உள்ளதையும் தெரிவித்தேன். இந்த  ஆண்டு வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களை பற்றி அறிந்து கொண்டு, அதற்கேற்ப  தங்களை  தயார்படுத்தத்த தொடங்க வேண்டும். அடிமட்ட  ஜனநாயகத்தை மீண்டும் நிலைநிறுத்துவதில் பெண்களுக்கு முக்கிய பங்கு உண்டு  என்பதை எடுத்துக்கூறினேன். பெண்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலமாக உள்ளூர் பிரச்னைகளை அவர்களே நிவர்த்தி  செய்ய முடியும்.

 பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்பவர்களின்  அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் இல்லை. எம்.எல்.ஏ.க்களாக பெண்களை தேர்ந்தெடுக்கும்  போது,  அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். இந்த நடைமுறையை  முதலில் உங்களில் இருந்து ஏன் தொடங்கக்கூடாது? முதல்வர்  நாராயணசாமி, சட்டமன்றம், நாடாளுமன்றத்தில்  பெண்களுக்கு 33 சதவீத  இட ஒதுக்கீடு கேட்கிறார். 4 பெண்கள் எம்எல்ஏக்களாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு பெண்ணுக்கு  கூட அமைச்சர் பதவி தரவில்லை. குறைந்தது, இரண்டு பதவிகளையாவது அவர் களுக்கு  இனிமேலாவத்து வழங்குவார்களா?  முதலில் இங்கிருந்து தொடங்குவோமா? இவ்வாறு அவர்  தெரிவித்துள்ளார்.

Tags : ladies ,
× RELATED 100 வயதை கடந்த 2 மூதாட்டிகளுக்கு கிராம...