×

புதுவை பல்கலையில் பரபரப்பு ஹோலி கொண்டாட்டத்தில் இருதரப்பு மாணவர்கள் மோதல்

காலாப்பட்டு, மார்ச் 12:  புதுவை காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது மாணவி மீது வண்ணப்ெபாடி பூசியதால் இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலாப்பட்டில் உள்ள புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் மாலை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ணப்பொடிகளை தூவி மகிழ்ந்தனர். இதில் தமிழ் மாணவர், வெளிமாநில மாணவி ஒருவர் மீது வண்ணப்பொடியை பூசியதாக தெரிகிறது. இதில் இருதரப்பு மாணவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். சக மாணவர்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். தகவலறிந்து அங்கு விரைந்து வந்த காலாப்பட்டு போலீசார் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அளித்த புகாரின்பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

Tags : celebration ,Holi ,
× RELATED முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி...