×

கொப்பரை தேங்காய் கிலோ ரூ.107க்கு ஏலம்

க.பரமத்தி, மார்ச்12: கொப்பரை தேங்காய் முதல் ரகம் விலை ஒரு கிலோ ரூ.107, ஏலம் போனது. இரு வெவ்வேறு ஒன்றிய பகுதியகளில் விலையும் தேங்காய்களை உடைத்து காய வைத்து தங்களது தேவைக்கு எண்ணை எடுத்தது போக மீதம் உள்ள பருப்பினையும், தேங்காய்களையும் அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள் தோறும் நடைபெறும் ஏலத்திற்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் சுமார் 484மூட்டைகளில் 23547கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டது. கொப்பரை தேங்காய் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.103, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.107, ஏலம் போனது. கடந்த வாரத்தை விட ஒரு கிலோவிற்கு ரூ.2உயர்ந்து ஏலம் போனது. இதே போல தேங்காய்களுக்காக நடந்த ஏலத்தில் சுமார் 2414 கிலோ எடையுள்ள 9739தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. இதில் ஒரு கிலோ தேங்காய்கள் விலை குறைந்த விலையாக  ரூ.30,  ஒரு கிலோ தேங்காய் அதிக விலையாக ரூ.36, ஏலம் விடப்பட்டது. கடந்த வாரத்தை விட தேங்காய் விலை  கிலோ ரூ.3 குறைந்து ஏலம் போனது.

Tags : Auction ,
× RELATED திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோயிலில் குழந்தைகளை ஏலம் விடும் வினோத விழா