×

கரூர் நகராட்சி பகுதியில் சேதமடைந்த பெயர்பலகையை மாற்ற வேண்டும் மக்கள் கோரிக்கை


கரூர், மார்ச் 12: கரூர் நகராட்சி பகுதியில் சேதம் அடைந்த பெயர்பலகையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கரூர் நகராட்சி பகுதியில் தெருபெயர்பலகைகள் கடந்த 4ஆண்டுகளுக்கு முன்னர் வைக்கப்பட்டன. எவர்சில்வர் கலர் பெயிண்ட் பூசப்பட்டு தெருக்களில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டன. இவ்வாறு வைக்கப்பட் பெயர்பலகைகள் தரம் குறைந்தவையாக இருந்ததால் பல இடங்களில் உடைந்துசேதம் அடைந்துவிட்டன. வெறும் கம்பம் தான் காணப்படுகிறது. கரூர் பூங்காநகரில் இதேபோன்று வைக்கப்பட்ட பெயர்பலகை சேதம்அடைந்தும் மாற்றப்படவில்லை. இதனால் புதிதாக இப்பகுதிக்குவருவோர் வீதியைக்கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். சேதம் அடைந்துள்ள பெயர்பலகைகளை கணக்கெடுத்து உடனடியாக சரிசெய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : municipality ,Karur ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...