×

மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் திமுக தலைவர் பிறந்தநாள் மினி மாரத்தான் போட்டி

சேலம், மார்ச் 12:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சேலம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி சார்பில், மாநில அளவிலான மரம் வளர்ப்போம் விழிப்புணர்வு மற்றும் தளபதி மினி மாரத்தான் 2020 என்ற போட்டி வரும் 15ம்தேதி (ஞாயிறு) காலை 6 மணிக்கு காடையாம்பட்டி இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகம் அருகில் நடக்கிறது. மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வம் வரவேற்கிறார். மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து தலைமை வகிக்கிறார். சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். ஆண்கள் பிரிவில் 12 கிமீ தூர ஓட்டத்தில் முதல் பரிசாக ₹15ஆயிரம், 2 மற்றும் 3ம் பரிசு முறையே ₹10ஆயிரம், ₹7 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 கிமீ தூரப்போட்டியில் முதல்பரிசாக ₹7ஆயிரம், 2மற்றும் 3ம் பரிசு முறையே ₹5ஆயிரம், ₹3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

2 கிமீ தூரத்திற்கு முதல் பரிசாக ₹2 ஆயிரம், 2 மற்றும் 3ம் பரிசாக முறையே ₹1500, ₹1000 வழங்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் 8 கிமீ தூரத்திற்கு முதல் பரிசாக ₹10ஆயிரம், 2மற்றும் 3வது பரிசு முறையே ₹7 ஆயிரம், ₹5ஆயிரம் வழங்கப்படுகிறது.  5 கிமீ தூரத்திற்கு முதல் பரிசாக ₹5ஆயிரம், 2 மற்றும் 3ம்பரிசு முறையே ₹4ஆயிரம், ₹3ஆயிரம் வழங்கப்படுகிறது. 2 கிமீ தூரத்திற்கு முதல்பரிசாக ₹2ஆயிரம், 2 மற்றும் 3ம் பரிசு முறையே ₹1500, ₹1000 வழங்கப்படுகிறது. அனைத்து பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் நாகேந்திரன், ரகுராஜ், மாமுண்டி கோபி உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags : DMK ,Birthday Mini Marathon Competition ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி