×

ஆடு, கோழி இறைச்சி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் இல்லை

சேலம், மார்ச் 12: சேலம் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் சண்முகம் மற்றும் செயலாளர் செல்வி மெஸ் உரிமையாளர் பி.எல். பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல் அசோசியேசன் மூலம், பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். சோப்பு மூலம் அடிக்கடி கைகளை கழுவிக்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்காது. தேவையில்லாத பதட்டம், பயம் தேவையில்லை. கோழி இறைச்சியால் எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். ஆடு, கோழி இறைச்சி சாப்பிடுவதால், எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை உறுதிபடுத்தி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

செம்மறி, வெள்ளாடு வளர்க்கும் விவசாயிகள் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் வேலைகளில் ஆடுகளை மேய்க்க வேண்டும். ஆடுகளின் மீது தண்ணீர் தெளித்து சுத்தமான குடிநீர் கொடுக்க வேண்டும். ஆடுகள் இருக்கும் இடத்தை சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும். இறைச்சி மற்றும் கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெயில் காலத்தில் தனிக் கவனம் செலுத்தி கோழிகளை பராமரிக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதுடன், விரைவில் செரிமானம் செய்ய கூடிய உணவை வழங்க வேண்டும். உரிய நேரத்தில் குடற்புழு நீக்கம், தடுப்பூசி போட வேண்டும். மேலும், கொளுத்தும் வெயிலின் போது கால்நடைகளை மேய்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம். வெயில் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டால் அருகில் உள்ள கால்டை மருத்துவ நிலையங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு கால்நடைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து...